திறந்த வெளியில் மலம் கழிப்பது மனித சுகாதாரத்துக்கு மிகப்பெரிய கேடு. இதனால் ஆண்டுதோறும் உலகில் 260 பில்லியன் டாலர் உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி கூறுகிறது.
மலத்தில் உள்ள கிருமிகள் காற்று, நீர், ஈ ஆகியவை மூலமாக குழந்தைகளின் கால் மற்றும் கைவிரல் நகங்கள் உணவு, குடிநீர் என எல்லா வகைகளிலும் தாக்கி வயிற்றுப்போக்கு, குடல்புண், வயிற்றில் கிருமிகள் ஏற்படுத்துகின்றன.