ஞாயிறுதோறும் தினமலர் நாளிதழுடன் இலவச இணைப்பாக வெளிவரும் வார மலரில் மாத்தி யோசிங்க பாஸ் என்ற தலைப்பில் தொடராக நான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
நான் பார்த்த, கேட்ட, உணர்ந்த பல சம்பவங்கள் இந்தக் கட்டுரைகளை எழுதுமாறு என்னைத் தூண்டியிருந்தன. இதில் என்னுடைய அனுபவங்களையும், என் நண்பர்கள், அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவங்களும் உண்டு. கற்பனை கொஞ்சம், உண்மை கொஞ்சம் என்று பல விகிதங்களில் கலந்து ஒவ்வொரு கட்டுரையிலும் செய்திகளைச் சொல்லியிருக்கிறேன்.