பிரமாண்டமான ஆலயம் இல்லை அது; ஆனால் பிரசித்தி பெற்றது நடைபாதைக் கோவில் என்றுதான் அடையாளப்படுத்த முடியும்; ஆனால் நம்பிக்கையின் ஊற்றுக்கண் அது. கோபுரங்களும், கலசங்களும் இல்லைதான்; ஆனால் கும்பிட்டவர்க்கு அருளும் கோலவிழி மாரியம்மன் குடியிருக்கும் கோவில் அது.
எங்கே இருக்கிறது இந்த ஆலயம்? வாருங்கள் பார்ப்போம்.
சென்னையின் பரபரப்பான சாலிக்கிராமம் அபுசாலி தெருவில் அமைந்திருக்கும் ஆலயம்தான், 'அருள்மிகு ஶ்ரீ சக்தி புற்று கருநாகக் கருமாரி அம்மன் ஆலயம்'