உலகம் உருவானதற்கு பல காரணம் உள்ளது அதில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது பெருவெடிப்பு கொள்கை ஆகும். பெருவெடிப்பு என்பது நமது பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதே அர்த்தம் ஆகும். இந்த பிரபஞ்சம் உருவான பொழுது ஒரு வெளிச்சம் தோன்றியது என்று கூறப்படுகிறது. முதலில் பெரு வெடிப்புக் கோட்பாட்டின்படி அண்டம் மிக அதிக அடர்த்தி கொண்ட ஒரு தீப்பிழம்பாக ஆரம்பித்தது. பெருவெடிப்பு தொடங்கியதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருள்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றன என்பதைப் பின்வரும் வரிசை குறிக்கின்றது. வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.