தன் கரைகளைத் தானே தீர்மானிக்கும் காட்டாற்று வெள்ளம் போலவே, கி.ரா.வின் புலமை மரபை அவர் எழுத்துகளே தீர்மானிக்கும். இதை அவர் மொழிநடையிலும் காண முடியும். பேச்சுத் தமிழே கி.ரா. அவர்களின் மொழி நடை. தொடக்கத்தில் அவரது எல்லா வகை எழுத்துகளும் புறக்கணிக்கப்பட்டது போலவே மொழி நடையும் புறக்கணிக்கப்பட்டதுபிற்காலத்தில்அவர் எழுத்துகள் செவ்வியல்தன்மை உடையவையாக அறிஞர்களால்ஏற்கப்பட்டன. ஆனால் மொழி நடை...?
புதுச்சேரியைமையமாகக் கொண்டு தமிழகம் தழுவிய நிலையில் முப்பதாண்டுகளுக்கும்மேலாக நடந்து வரும் பேச்சு நடைக்கும் பண்டிதர் நடைக்குமான அரசியல் செயல்பாடுகளை ஒரு விவாதம் போல பெரும்பயணத்தை இந்த நூல் தொடங்கிவைத்துள்ளது