தாயுமானவர் கண்ட மனம் மனிதன் கடவுள் . இந்நூலில், தாயுமானவர் தமிழ் தந்த ஞானங்களுக்குப் புதிய விளக்கம் கண்டு முடிசூட்டி மகிழ்கிறார்; அவர் கண்ட மனம், அவர் கண்ட மனிதன், அவர் கண்ட கடவுள் காட்சிகளைத் தென்னகத்தின் அரிய சித்தாந்தப் பின்புலங்களில் காண்பதுடன் சன்மார்க்கத்தின் உச்சித்திலகமான ஒளிசெய் மானுடக் காட்சியை அவர் புலப்படுத்தியிருப்பதனையும் இதில் காணமுடியும். தமிழ்த் தத்துவ உலகின் சிகரங்களில் தலைசிறந்த ஒருவரான தாயுமானவர் குறித்த இந்நூல் அரியதொரு ஆய்வுப்படைப்பாகும்.