அன்பெனும் மொழியில் மட்டுமே உரையாடிய நான்கு கால் நண்பன் ஸ்டார்க்கியின் நினைவாக...''நான் ஜூடி'' என்றபடி பிரகாசமான புன்னகையுடன் கையை நீட்டினாள் அவள். என் முகத்தில் அதுவரை இருந்த சிரிப்பு சட்டென்று மறைந்தநான் பதிலுக்குக் கை நீட்டாமல் சில நொடிகள் அநாகரிமாக உறைந்து நின்றேன். விழுங்க முடியாத சில நீண்ட நொடிகள் காற்றில் தொற்றி நின்றன. எனக்கும் அவளுக்கும்.