நானும் பிரேமும் எழுதி, சேர்ந்து வெளியிட்ட ஐந்து கதைத் தொகுதிகளில் இடம்பெற்ற முப்பத்தியைந்து கதைகளில் பிரேமின் ஓரிரு வார்த்தைகளோ, வாக்கியங்களோ, பத்திகளோ கலக்காமல் சுயம்புவாக நான் தனித்து எழுதிய இருபத்துமூன்று கதைகளின் தொகுப்பே இந்நூல். இக்கதைகள் கீழ் காணும் தொகுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.1.முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன2.கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்
3.பரதேசி
4.மகாமுனி5.குருவிக்காரச் சீமாட்டி