குடும்ப வன்முறை நிறைந்த, சிதைந்த உறவுகள் சூழ வளரும் நுண்ணுர்வு கொண்ட சிறுவன் நிதர்சனத்திலிருந்து தப்புவதற்கு கற்பனையை தேடுகிறான். இந்த நினைவுக்குறிப்பு தன்மை ஒரு உத்தி என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். உண்மையில் இவற்றுள் எந்த அளவிற்கு புனைவு எந்த அளவிற்கு அசல் என்பதை எழுத்தாளரே அறிவார் அல்லது அவரும் கூட அறியமாட்டார். அறிதல் எனும் துயரம் வாழ்வை சுவாரசியமற்ற அன்றாடமாக மாற்றும் துக்ககரமான சித்திரத்தை காலத்துகளின் கதைகள் அளிக்கின்றன. செங்கல்பட்டும் ஒரு கதாப்பாத்திரமாக உருபெறுகிறது.