ரெய்கி என்கிற சொல் பலராலும் உச்சரிக்கப்பட்டுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சை முறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. ரெய்கி சிகிச்சையாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள். அதே சமயம் ரெய்கி என்பது ஏதோ ஒரு ரகசியமான விஷயம் என்பது போன்ற தோற்றமும் உருவாக்கப்பட்டு வருகிறது. பார்க்கப் போனால் ரெய்கி என்கிற சக்தியை எவரும் பெற்றுப் பயனடையலாம் என்பதுதான் உண்மை.