மனம் என்பது உடலுக்குள் இருப்பதாகக் கருதப்படும் ஒரு பொருள். உடல் உறுதியாக இருந்தால் உள்ளமும் உறுதியாக இருக்கும். அந்த இரண்டையும் உறுதியாக வைத்துப் பேண உதவுவதுதான் யோகாசனம் என்னும் பயிற்சி. ஞானியர்களும், முனிவர்களும், சித்தர்களும் மேற்கொண்டிருந்த பெருமைக்குரியது. 21ஆம் நூற்றாண்டில்தான் அதன் பெருமை உணர்ப்படும் உணர்த்தப்பட்டும் மக்களிடம் பரவலாக இடம்பெற்றது. பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்த ஒன்று பழக்கத்திலிருந்து விடுபட்டு நூல்களிலும் சித்தர் இலக்கியங்களிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இப்போது மீண்டும் வெளிச்சத்துக்கு.