நம்புங்கள் ,நல்லதே நடக்கும் என்றால், நம்பினால் நல்லதே நடக்குமா ? என்று கேள்வி கேட்காதீர்கள். நம்பித்தான் பாருங்களேன் நடக்கும். சந்தேகத்துடனேயே நம்பினால் நடக்காது சார். திடமான எண்ணத்துடன் நம்புங்கள் ;நடக்கும். வைராக்கியத்துடன் இருப்பவர்கள் காரிய சாதனை புரிவதை நீங்களே கண்கூடாகக் கண்டிருப்பீர்கள். கிட்டத்தட்ட வைராக்கியம்தான் நம்பிக்கை. இனி,என்ன ? வைராக்கியத்துடன் செயல்படுவது என்பது உங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே, அப்புறமென்ன செயல்படுங்கள் ; வெற்றி பெறுங்கள். இந்த ரகசியத்தைத்தான் ஆசிரியர் நூல் முழுவதும் விளக்குகிறார். படியுங்கள் ; படித்துப் பயன் பெறுங்கள்.