தமிழ் மொழியை வளம்பெற வளர்த்தது தமிழகம். பரந்துபட்ட தமிழகத்தின் பாற்பாடுவதே ஈழநாடு கடலாற் சுழப்பெற்ற ஈழ நாட்டிலே வாழும் தமிழ் மக்கள் தமிழ் மொழி வளர்ப்பில் என்றுமே பின்னின்றதில்லை. பல அறிஞர்களைப் பெற்றுப் பெருமை கண்டது ஈழநாடு இந்த வகையிலே கவிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்து தமிழ் மொழிக்கு அளப்பரிய தொண்டு செய்த பெருமை முத்தமிழ் முனிவரான அருட்டிரு விபுலாநந்த அடிகளாருக்கே உரியதாகும்.