ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்பே அவர்களின் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது கர்ம வினைக் கேற்ப்பவே அனைத்தும் நடைபெறும் என்பதும், அவை முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதும் கர்மாவை மாற்றவோ அழிக்கவோ முடியாது என்பதும் இறைவன் இட்ட கட்டளையாகும். அப்படி என்றால் நடப்பது நடக்கட்டுமே. ஏன் ஜோதிடரிடம் சொல்ல வேண்டும் என்ற வினா எழுகிறது. இறைவனின் பிரதிநிதிகள் கிரகங்களே. அவர்களே ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு காரணமான வர்கள். அவர்களிடம் மனமார பிரார்த்தனை செய்தால் கர்மவினையினால் ஏற்பட்ட பாதிப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை தருவார்கள்.