ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்றே மிக முக்கியமான கலை வைத்தியம் இந்த இரு கலைகளிலும் நம் முன்னோர்கள் கரை கண்டவர்களாக இருந்தனர். அப்போதெல்லாம் நோயாளியை பார்த்த நேரத்திலேயே அவனுக்கு எந்த வியாதி. அது எப்போது தீரும் என்று சொல்லும் அளவுக்குத் திறமையானவர்களாக இருந்தனர். அதில் சிறந்தவர்கள் அரச வைத்தியராகவும் இருந்தனர்.