மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் என்ற இந்த நூலில் 100 மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. படிப்பவர்களின் நலன் கருதி மூலிகைகள் அகரவரிசைப் படுத்தப்பெற்றுள்ளன. ஒவ்வொரு மூலிகையின் தன்மை, அதவாது புற அக அமைப்புக்கள், வளரக்கூடிய இடங்கள், சூழல்கள் பற்றி விரிவாக்க் கூறப்பெற்றுள்ளன. மேலும் மருத்துவ முறையில் அவை பயன்படும் விதமும் விளக்கப்பெற்றுள்ளன. மூலிகைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அவற்றின் படங்கள் வரையப்பெற்றுள்ளன. மூலிகைகளின் இலை, பூ. காய் இவற்றையே பிரானமாகக் கொண்டு வரையப் பெற்றுள்ளன.