பள்ளி மற்றும் கல்லுாரி சுற்றுப்புறங்களையும், கழிப்பறைகளையும் மாணவர்கள் சுத்தமாக வைக்கும் வகையில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய பாடமாக வைக்க வேண்டும் என, சட்டசபை மறு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
துணை சபாநாயகர் சிவசங்கர் ரெட்டி தலைமையிலான கமிட்டி, தாக்கல் செய்துள்ள அறிக்கையில், புரட்சிகரமான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது
அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், நாள்தோறும் தங்கள் பள்ளியின் சுற்றுப்புறத்தையும், கழிப்பறையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
அத்துடன், மாதம் இரண்டு மணி நேரம் பொது சாலைகளை சுத்தம் செய்வதை, பாடமாகவே வைக்க வேண்டும். இதனால், ஜாதி பாகுபாடு கூட குறைய வாய்ப்புள்ளது.