ஒரு சிறுகதை எப்பொழுது உயிரும், வலிமையும், வனப்பும், சமூகத்தை ஊடுருவும் ஆற்றலும் கொண்டதாக உருவாகிறது? கலைஞன் சித்திரிக்கும் சூழலுக்குள் இருந்து கதை தவிர்க்க இயலாமல் முளைத்து வரும்போது முளைத்து அந்தச் சூழலை உறிஞ்சியே வளரும்போது கதை முடியும்போது மொட்டு தோன்றி, இதழ் உடைந்து மலரும்போது அதன் மணம் வாசகனின் மனம் முழுவதும் நிறையும்போது இன்னும் ஒரு வகையில் சொன்னால் படைப்பின் கரு பின்புலத்தோடு ஒட்ட வேண்டும். பின்புலம் வாழ்வோடு ஒட்ட வேண்டும். வாழ்வு வரலாற்றோடு ஒட்ட வேண்டும். மொத்தமும் வாசகனின் உணர்வோடு ஒட்ட வேண்டும். இம்மாதிரியான கதைகள் இத்தொகுப்பில் பல உள்ளன. கொ.மா. கோதண்டம் இந்தத் தொகுப்பின் மூலம் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். நம் மூதாதையர்கள் குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்று நம் நிலத்தை ஐந்தாகப் பிரித்தார்கள். சங்கப் பாடல்கள் பல இடைக்காலத்தில் ஏற்பட்ட சுருக்கத்தை இவர் தன் பேனாவால் ஓரளவுக்கு நிமிர்த்தியிருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நின்று ஒளி வீசும் கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன.