இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகளும், புதினங்களும் எழுதிவருகிறார். இவர் எழுதிய முதல் சிறுகதை எம்.எஸ்.மணியன் நடத்திய கற்பூரம் இதழில் வெளியானது. இவரது சிறுகதைகள் தீபம் (இதழ்), தென்றல், கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். எட்டாவது படிக்கும்போது என் வகுப்பில் கதை, கவிதை எழுதும் ஒரு பையன் இருந்தான். வாத்தியார்கள் எதற்கெடுத்தாலும் அவனைத்தான் அழைப்பார்கள். அவன் மீது எனக்கு ஒருவித எரிச்சல். அவன் நூலகம் செல்லும்போது பின்தொடர ஆரம்பித்தேன். அவன் வாசித்த புத்தகத்தையே நானும் எடுத்து வாசித்தேன். வீட்டுக்கு வந்ததும் அதைப் போலவே ஒரு கதையை எழுதிப்பார்த்தேன். வாத்தியார்களிடம் அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, எழுத்து கொடுத்த மயக்கத்தில் பள்ளிக்கூடம் செல்வதையும் விட்டுவிட்டேன்