நேசனல் ஜியாகிரப், அனிமல் பிளாண்ட் விலங்கியல் தொலைக்காட்சித் தொடர்களுக்கு படங்கள் எடுக்கச் சென்று அங்கேயே தங்கியிருந்து காமிராமேன்கள் படம் எடுத்து அனுப்புவதுபோல நானும் மலைத் தோட்டங்களில் தங்கியும், மலைபடு பொருட்களை குத்தகைக்கு எடுப்போருக்காக பணியாட்கள் பலநாள் உள்காடுகளில் தங்கி பொருள் சேகரிப்போருடன் குச்சில்களில் தங்கியும், மலைவாசி மக்களுடன் உடன் சென்று இரவில் பந்தம் கொளுத்திவைத்து ஆற்றங்கரையில் தங்கியும் அவர் களுடன் குகைகளில் தங்கியும் என் நண்பன் ஆதிவாசிச் சிறுவன் நீலனுடன் அடர்வனங்களில் அலைந்தும், விலங்குகள் பற்றி, பறவைகள் பற்றி, தாவரங்கள் பற்றி நேரில் கண்டவற்றையே இந்நூலில் எழுதியிருக்கிறேன். இதைப் படிக்கும் உங்களுக்கு அடர் வனங்களுக்கு நேரில் செல்வதுபோல உணர்வு ஏற்படும்.
- கொ.மா.கோதண்டம்