ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான 'மணிமேகலை' யினை குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம் அவர்கள் சுவைபட நாடக வடிவில் ஆக்கித் தந்துள்ளார். மதுரை வானொலி நிலையத்தில் ஐம்பெரும் காப்பியங்களை நாடகங்களாக்கி ஒலிபரப்பியபோது இவரின் 'மணிமேகலை' நாடகமும் ஒலிபரப்பப்பெற்று நேயர்களின் பாராட்டைப் பெற்றது.