பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும்.
மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது.
இந்நூல்,கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது. 8வது பாடல் மட்டுமே பஃறொடை வெண்பா. ஏனையவை, நான்கு அடிகளைக் கொண்ட இன்னிசை வெண்பா.
இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார் ஆவர். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர்.