நீங்கள் நோயின்றி நலமுடன் வாழவேண்டுமா? அதற்கு ஒரே வழி இயற்கை உணவை உண்பதுதான் என்று கூறுகிறது "அடுப்பில்லாமல் அறுசுவை உணவு" என்ற இந்நூல். இதை ஆக்கியவர்கள் டாக்டர் கோ.மா. கோதண்டம் அவர்களும் டாக்டர் பி. முருகேசன் அவர்களும் ஆவர். இயற்கை மருத்துவமுகாமில் கலந்து கொண்டபோது அங்கு உணவு தயாரிப்பது, அவர்களுக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்களை ஆதாரமாக்க் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார்.
சமைத்த உணவால் மனிதனின் உடல் உறுப்புகளுக்கு தேவையான இயற்கைச் சத்துக்கள் கிடைக்காத்தால், அவை சரியாக இயங்க முடிவதில்லை. விளைவு மனிதன் பல நோய்களுக்கு உள்ளாகிறான். இதைத் தவிர்க்க இயற்கை உணவை உண்ண வேண்டியதன் அவசியத்தை இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது.