நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலருக்கு இந்தக் குறைவற்ற செல்வம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லாத நாட்களே இல்லை என்பதே இன்றைய நிலை!
இது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரக்க் கல் போன்றவை வருமுன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல்.