கடந்த மூன்று வருடங்களாய் தினமணி இளைஞர் மணியில் வெளிவரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரின் மூன்றாம் பாகம் இது. He who sups with the devil should have a long spoon எனும் சொலவடையை காவல்துறையினரைப் பொறுத்து எளிய மக்கள் எப்படி புரிந்து கொள்வது, she protested to onions being added to his sambar என சொல்லும் போது protestஇன் பொருள் எப்படி மாறுகிறது, நேரம் கடந்து தூங்குவதற்கு sleep off சரியா அல்லது oversleep பொருத்தமானதா, bro என நண்பனை அழைப்பதற்கும் bromanceக்கும் என்ன தொடர்பு ஆகிய கேள்விகளுக்கு பல சுவாரஸ்ய்மான விளக்கங்களை இந்நூலில் காணலாம்.