குழந்தை வளர்ப்பு என்பது மரம், செடி, கொடி, வளர்ப்பதைப் போன்றதல்ல. தண்ணீர் ஊற்றி, உரமிட்டு வளர்ப்பது போல் அல்ல. குழந்தை வளர்ப்பில் பெற்றோர்,உற்றோரின் பங்குப் பெரும் பங்கு, மிதல் மூன்று மாதங்கள் அன்றாடக் கவனிப்பில் அக்கறை செலுத்தவேண்டும். குழந்தையின் தூக்கத்திற்காகத் தாய் தூக்கத்தை இழக்கும் நிலை வரும். தக்க சமயத்தில் தடுப்பூசிகள் போடவேண்டும். ஓயாமல் அழுகின்ற குழந்தையின் உடல் நிலையைக் கண்டறிய வேண்டும். ஊட்டச் சத்துள்ள உணவுகள் ஊட்டப்படவேண்டும். குழந்தையின் மனோ பாவங்களை உணர்ந்து உற்றறியும் போக்குப் பெற்றோரிடம் இருந்தே தீரவேண்டும். குழந்தை வளர்ப்பு என்ற இந்நூலை மருத்துவதுறையில் புகழ்பெற்ற டாக்டர் திருமிகு, த. திருஞானம் பெற்றோர்களுக்குப் பெரிதும் உதவும் வகையில், பெற்றோர் வியந்து பாராட்டும் வகையில் சிறப்பாக ஆக்கித் தந்துள்ளார்.
- பதிப்பகத்தார்.