திரு பகலவன் அவர்கள் பெருமுயற்சி செய்து கொண்டு நிரங்காரி இயக்கத்தின் ஆன்மீக வெளியாடான "Stream of Thoughts" என்ற ஆங்கில புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை தமிழாக்கம் செய்து எழுதியுள்ளார்.
இந்நூலின் நான் யார்,கடவுளை உணர்ந்தறிய ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை,மனித வாழ்வில் சற்குருவின் அவசியம், ஆகியவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அவருடைய எழுத்தின் நடை எளிமையாகவும், படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் உள்ளது.
மேலும் இந்நூல் கடவுள் தாகம் உள்ளவர்களுக்கு தாகம்தணிக்கும்த நீரோடையாக அமையும். ஆன்மீக அன்பர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அவருடைய எழுத்துப் பணி தொடர்ந்து மேலும் பல நூல்கள் எழுதி வெற்றி பெற நிரங்கார் இறைவனை வேண்டுகிறேன்.
இவண்
P.T. பெருமாள்பிரமுக் - தஞ்சாவூர்