மன நிம்மதி எங்கே கிடைக்கும் என்று கேட்டால் அது மந்திராலயத்தில் கிடைக்கும் என்று சொல்கிற அடியார்கள் கூட்டம் இன்று
அதிகம். ஆன்மிக நிழல், அல்லல் படும் மனிதனுக்கு ஆறுதலைக்கொடுக்கிறது என்பது உணைமதான். அந்த வகையில் மந்திராலயத்தை நோக்கியும் இன்றைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செல்லக் கூடியவர்கள் இனிமேல் இந்தப்புத்தகத்தையும் ஒரு முறை படித்து விட்டுச் சென்றால் அவர்களின் ஆன்மிகப் பயணம் மேலும் இனிதாக அமையும். அன்பு மிகுந்த நண்பர் கீதைப் பிரியன் சாய் மணிகண்டன், ஆர் அவர்கள் இந்தப்புத்தகத்தில் பலசுவையான நிகழ்ச்சிகளைஅழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். துங்கபத்ரா நதிக்கரை நோக்கிச் செல்கிறவர்களுக்குத் துணை செய்யும் புத்தகம் இது. இதை வழங்கியவர்க்கும் வாசிப்பவர்க்கும் நமது நல்வாழ்த்துக்கள்.
- பதிப்பகத்தார்.