தற்காலத்தில் கிட்டதட்ட எல்லா பத்திரிகைகளிலும் வார ராசிபலன், மாத ராசிபலன் என்கிற அடிப்படையில் ராசி பலன் வருவது
தெரிந்த விஷயமே. இந்தப் பலன்கள் ஒவ்வொரு இராசிக்கார்ர்களுக்கும் , அப்படியே ஒத்து வருவதில்லை. ஒரே இராசியில் உள்ள ஒரு சிலருக்கு பத்திரிகையில் எழுதப்படுகிற பலன்கள் சில சமயம் பலித்து விடும். அதே சமயம் அயே இராசியிலுள்ள வேறு சிலருக்குஅது பலிக்காது போய்விடும். சுருங்கக்கூறின் இந்த வித மாற்றத்திற்குக் காரணம் அவரவர் இராசி ரீதியாக நவக்கோட்டைகள் சஞ்சாரம் செய்யும் நிலையைப் பொறுத்து அமையக்கூடியது. கனவே ஒரு மனிதரது எதிர் கால பலன்களை அறிய அவரவர் ஜாதக கிரக நிலைகளையும் கோட்சார சஞ்சார நிலைகளையும் இணைத்துப் பார்த்து கூட்டிக் கழித்து நடுவுநிலைமையாக பலபலன்களை கூறுவது அவசியமாகும். இந்நூலில் இப்பலன்களை எப்படி இணைத்துப் பார்ப்பது.அதன் விதிமுறைகள் என்ன ? என்பதை விளக்கமாகக் கூற முற்பட்டுள்ளேன். இந்நூல் ஒவ்வொரு வாசகருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். புதிதாக ஜோதிடம் கற்பவர் முதல் ஏற்கனவே ஜோதிடம் கற்றுமேதைகளாக இருக்கும் பெரியோர் வரை-அனைவருக்கும் மயன்படக் கூடிய அளவில் மிக முக்கியமான விஷயங்களை இதில் எழுதியுள்ளேன்.
A. பிரகஸ்பதி .எம். ஏ. பி.ஏ.