சென்ற ஆறு ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியொன்றில் 'புதிரா புனிதமா' என்ற தலைப்பில் ஒரு பாலியல் கல்வி நிகழ்ச்சியை நடத்தி வந்தேன். அப்போது பல நேயர்கள் பாலியல் கல்விக்கான புத்தகம் தமிழில் வெளிவந்தால் நல்ல பயனளிக்கும் என்று எழுதியிருந்தனர். அதன் அடிப்படையில், அந்த நிகழ்ச்சியில் பல நேயர்கள்களின் சந்தேகங்களுக்கு தான் அளித்த பதில்களையும், மற்றும் 32 வருட மனநல மருத்துவ அனுபவத்தையும், இது சம்பந்தமான பல புத்தகங்களிலிருந்து, சஞ்சிகைகளிலிருந்தும் சேகரித்த விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளேன் . புத்தகத்தில் பல இடங்களிலும் பதில்கள் கொச்சைத் தமிழிலும் கூறப்பட்டிருக்கின்றன. அது பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கையாளப்பட்டிருக்கின்றது. எனது இப்பணி நிறைவேற படிக்கும் மாணவிக்கு எனது நன்றி உரித்தாகுக. தொலைக்காட்சியில் நேயர்கள் சார்பாக என்னை கேள்வி கேட்டு பதில் பெற்ற டாக்டர் ஷர்மிளா, செல்வி அமிர்தவல்லிக்கும், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும் இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட திரு.ரபிபெர்னார்டு ,திரு.நாவண்ணன் மற்றும் பல ஊழியர்களுக்கும் எனது நன்றி உரித்தானது.
- ந.மாத்ருபூதம்.