சப்தரிஷி மண்டலம் மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்சத்திரங்கள் ஏர்க்கால் போன்று ஒரு முனை கிழக்காக இருக்குமாறு காணப்படுகிறது. இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என அழைக்கிறோம்.