உங்கள் இலக்கை அடைவதற்காக, உண்மையிலேயே என்ன முயற்சி செய்ய வேண்டுமோ, அதை செய்ய என்ன கற்க
வேண்டுமோ, அதை கற்க யாரை சந்தித்தால் தேவையான உதவி கிடைக்குமோ, அங்கே யாரிடம் பேசினால் தெளிவு கிடைக்குமோ, அவரிடம் எது உங்களை விட்டு விலகி போகிறதோ, அதை பிடிக்க எந்த தடை தடுக்கிறதோ, அதை உடைக்க உடனே போங்கள். கிளம்புங்கள் பைக்கை எடுத்து விரட்டுங்கள் காரை எடுத்துபறங்கள் . பஸ் பிடித்து துரத்துங்கள். எதுவுமே இல்லையா ? இருக்கவே இருக்கிறது, அருமையான இரண்டு கால்கள் எடுங்கள் ஓட்டம். இந்த புத்தகத்தை படிப்பதில் நேரத்தை செலவிடுவதால், நீங்களே உங்கள் குறிக்கோளை அடைவதை தாமதப்படுத்துகிறீர்கள் . அதனால் இதை மூடிவிட்டு உடனே ஓடுங்கள். ஓடி விட்டீர்களா? very good வாழ்த்துக்கள். உங்கள் இலக்கை முக்கால்வாசி அடைந்து விட்டீர்கள். அப்பாடா இனி நான் எதுவும் எழுத தேவையில்லை. லட்சியத்த கண்டுபிடிக்கிற லட்சித்துல வெற்றி அடைஞ்சுட்டு , திரும்ப வந்து இந்த புத்தகத்த திறக்காதீங்க . நீங்க தீர்மானிச்ச உங்களடைய உண்மையான லட்சியத்த அடையற வழியப்காருங்க.
- பதிப்பகத்தார்.