விஞ்ஞானமும் -மெய்ஞானமும் வெவ்வேறு தளங்களில் இயங்கி மனித வாழ்வை மேம்படுத்தத்தூண்டுகிறது. இந்த இரண்டும்
கலந்து சில நூல்கள் வெளிவருகின்றன. இத்தகைய நூல்களின் வரிசையில் திரு. ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்கள் எழுதிய
வெற்றியின் ரகசியம் என்னும் நூல் எண்ணங்களின் வலிமையையும், ஆழ்மனத்தின் ரகசியங்களையும் சொல்லும் ஞானக்களஞ்சியம் மனிதனுக்குள் புதைந்த வெற்றியைத் தேடித் தரும் புதையல் புதிய புதிய செய்திகள் படையல். ரணங்களைத் தாங்கிக் கொண்ட சாதாரண மனிதன்தான் சாதனையாளனாகியுள்ளான். உங்களுடைய எண்ணங்கள் தான் உங்களுடைய உண்மையான தெய்வம். வெற்றி என்ற இரும்புத் துண்டை கவர்ந்து இழுக்கும் ஒரு மாபெரும் காந்தமலையாக உன் மனம் இருக்க வேண்டும் நம்புங்கள் உங்களை நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. எண்ணங்களை மேம்படுத்த, வாழ்வை வசப்படுத்த வாசியுங்கள், வாழ்க்கையை நேசிப்பீர்கள் வெற்றியை வாசிப்பீர்கள்.
- பா. விஜய்.