இன்றும் பல தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வியாபாரம் - தொழிலில் ஈடுபட்டு பெருஞ் செல்வந்தர்களாக விளக்குகிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் சிறந்து விளக்குபவர்கள். இவர்களின் விரைந்த முன்னேற்றத்திற்கு அடிப்படைக்காரணம் தொழிலில் நாணயமும், உள்ளார்ந்த ஈடுபாடும் மட்டுமல்ல, அவர்களின் இறை பக்தியும், அதை உள்ளடக்கிய பூஜை முறைகள்,மந்திரப் பிரயோகம் ஆகியவைகளேயாகும்.
வியாபாரம் - தொழில் எதுவாகிலும் அவைகள் விருத்தியடைவதற்கு முறையான மந்திர உச்சாடனங்கள் தேவப்படுகின்றன என்பது கண்கூடு. நமது முன்னோர்களும், மகான்களும் அத்தகைய ஆற்றல் பெற்ற மந்திரங்களை நமக்கு அருளியுள்ளனர்.
அவைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து 'வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்' எனும் இந்நூல் தெளிவாக விளக்கப்படுகிறது.