வாழ்க்கையே தேவைகளின் திரு விழா தானே. தேவைகள் இல்லாமல்- மனிதனால் வாழ முடியுமா என்ன?ஆனால் ,அப்படிப்பட்ட
தேவைகளாலேயே - மனிதனின் வாழ்க்கை அலைக்கழிவாக மாறிவிட்டது. வாழ்க்கையை அலங்கரிப்பதோ அலங்கோலப்படுத்துவதோ 'மனிதத் தேவைகள்' தான் தேவைகளின் சுரங்கமாகவே வாழ்க்கை திகழ்கிறது. எடுக்க எடுக்கக் குறைவில்லாத் தேவைகள். மனிதனால் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு அல்லது தேவைகளைத் தூர்த்து விட்டோ போய் விட முடியுமா? தூர்த்து விடுவதாகச் சொன்னால் நீங்கள் மனிதனாக இருக்க முடியாது. தெய்வமாகவோ - முனிவனாகவோதான் முன்னிற்க முடியும். மாறாக, ஒரு தேவையைத் தீர்த்து விட்டு -மற்றொரு தேவையைச் சந்திக்கத் தயாராகி , அப்படி வரிசை வரிசையாய் எழும் தேவைகளைத் தீர்க்க முற்படுவதுமே -ஒருவரை முழுமையாக்கும் இயற்கையின் சூத்திரமாகும். இயற்கையின் இந்த சுழற்சிச் சூத்திறத்தை - நடைமுறையில் நாம் சந்திக்கும் சூட்சமத்தை இங்கே கண்டு நம் கனவுகளையெல்லாம் நனவாக்குவோம். வர்த்தகமானாலும் சரி, விளையாட்டானாலும் சரி போர்க்களமானாலும் சரி ஆனுமீகமானாலும் சரி அரசியலானாலும் சரி மனித்த் தேவைகளே மாற்றங்களைத் தீர்மானிக்கின்றன.
-ம.திருவள்ளுவர்.