அழுக்குச் சுரக்குக்கையைத்தான் இக்கதைக் களஞ்சியமாக விதைவித்துக்களைப் போட்டு வைத்திருந்தான் துர்க்கையாண்டி ஆத்தோய். சுரக்கடுக்கையை ஆட்டினால் நீர்மேல் கொடிபடரும் பொடிப்பாவக்காய்களை நீஞ்சிய கம்மாயில் மஞ்சக் களவாணிப் பிறாந்து விசில் கொடுத்தால் ஊர்ப்பிள்ளைகள் தாவிச் சொருக் கடித்துப் பறிக்கப் பறிக்க முளைத்துவிடும் கசப்பான கருசல் வாழ்வும் இக்கதைகளுக்குள் இவை மிதிபாகல்விதைகளின் கசந்த அபிதானக் கதைகளாயின் கதை நிலம்பிளக்கும் கணம் இடைவெளி தூரங்களைப் புனைவின் ஓட்டத்தில் நிரவல் செய்வதற்குத் தாமதமாகும் க்ஷாணங்களை எழுதும் வெற்றிலை மடிப்பின் எட்டாவது துளையை விரல் தொடுவதற்கு முன் நவீனச் சிறுகதையின் பாம்பு விரலை உடும்பு வலுவாய்க் கவ்விக் கொண்டதால் இனியான புனை கதையின் வாடிய பளிதமாய் ஏழுதுவாரங்களின் காத்திருப்பு....