இக்கால உலகிலும் மாத்திரை, மருந்துகள் இல்லா வாழ்வு இயன்றால் சாத்தியமே என ஆதாரங்களுடன் வலியுறுத்துகிறார் இந்நூலாசிரியர் திரு இரத்தின சக்திவேல்.
அதற்கான உன்னத, உயர்ந்த, எளிய, சிறப்பான வழிகளில் ஒன்றே உணவின் பெரும் பகுதியையே, இயன்ற அளவில் இயற்கைச்செல்வமான கனிகளை இணைப்பது என்கிறார். இவரின் பதினைந்து வருட கனி உணவு அனுபவம் அதற்கு துணை சேர்க்கிறது. அற்புத சக்தி தருகிறது.
அப்படிப்பட்ட அற்புத உணவுக்கனிகளில் சிறப்பு விவரங்கள், இயற்க மருத்துவ முகாம் அனுபவங்கள் கனிகளின் மூலப் பாடல்கள், மருத்துவப் பயன்களை இந்நூலில் இணைத்து இன்பத்தேன் சொட்டும் கனி ரசமாக இன்பத் தமிழ் மனம் கமழ இயற்கை வாழ்வியல் அன்பவர்களுக்கு இனிய போதைத்தருகிறார்.