எட்டுத் திக்கும் பரபரப்பாய் பயணித்தபடி இருக்கிறது நவீன வாழ்க்கை - அன்றாட சிராய்ப்புகளுடன்.விழித்திருக்கும் கணங்கள் எல்லாம் அகமனிதன் போராட்டங்கள்.புறஉலகின் எதிர்வினைகள்.நிழல் எது நிஜம் எது என இனம் காணமுடியாதபடி விரிகிறது மனித வாழ்க்கை.இந்த யுகம் தீர்வைத் தேடி அலைந்தபடி இருக்கிறது. இப்படி அலைக்கழிந்து திரியும் மனிதர்களுக்கு இந்த நூல் ஒரு சாய்வு நாற்காலி புதியதோர் உலகிற்கான திறவுகோல்; நம்மை நாமே வென்றெடுக்க உதவும் ஒரு வழிகாட்டி.