கம்பருடைய காப்பியச் சிறப்புகளுள் அவருடைய கதை மாந்தர் படைப்புத்திறன் பெரிதும் போற்றப்படுகிறது. கதை மாந்தர்களின் செயற்பாடே காப்பியக் கதை ஆகிறது. எனவேதான் காப்பியத்தில் பாத்திரங்கள் முதன்மை பெறுகின்றன. காப்பியத்தின் முதன்மைக்கூறுகளான பாத்திரங்கள் பற்றிய ஒரு ஆழமான பார்வையைத் தரும் நூல்.