சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இது குறிப்பாக மூன்றாவது சங்க காலத்தைக் குறிப்பிடுவதாகும். இக்காலப்பகுதி பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.[1]மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.