இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியைப் பாருங்கள். இந்த நாடு முழுவதும்
தேடினாலும் இவரைவிட சிறந்தவரைக் காண்பது அரிது. கீழ்த்திசை அறிவாயினும்
மேற்றிசை அறிவாயினும் அதனைப் பெரிதும் உணர்ந்தவர். ஒவ்வொரு நாட்டிலும்
காணப்படும் நல்லவை எவையோ அவற்றை எடுத்துக் கொள்ளும் பெருந்தகையாளர்” என
சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் மூலம் பாஸ்கர சேதுபதியை பைந்தமிழ்
மன்னராக அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். பத்தொன்பதாம் நூற்றாண்டில்
ஆலயத்திற்குள் புகுந்த அரிசன மக்களைத் தடுத்து வழக்கு தொடுக்கப்பட்டதும்
மன்னர் பாஸ்கர சேதுபதி தலையிட்டு அமைதி ஏற்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்கள்
கமுதி மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட உரிமையுண்டு என்பதை
அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியதையும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது.