ஈரோடு என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருபவர் தந்தை பெரியார். அதேபோல, புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரது நினைவுக்கு வருபவர் த.ஸ்டாலின் குணசேகரன். சிறந்த மேடைப் பேச்சாளர்களால் சிறப்பாக எழுத முடியாது. சிறந்த எழுத்தாளர்களால் , மக்களைக் கவரும் வகையில் பேச முடியாது. பேச்சு, எழுத்து இரண்டிலும் ஆற்றல் மிகுந்தவர்களால் அமைப்பை உருவாக்கி, வெற்றிகரமாய் நடத்த முடியாது. ஆனால், இத்தனை ஆற்றலும் பெற்று, தலைமைப்பண்பு, ஆளுமைத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்பவர்தான் ஸ்டாலின் குணசேகரன்