இராமாயணங்கள் எத்தனை வகை?’ என்ற ஒரு கேள்விக்கான விடை காண்பதே மிகப் பெரும் புதிரான பணியாகும். பலரும் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார் என்றே கருதியிருப்பார்கள். அது தவறு. உண்மையில் நாட்டுப்புறக் கதைகளாக வாய்மொழி மூலமாகவே பல வகையான இராமாயணக் கதைகள் கடத்தப்பட்டு வரப்பட்டு, பல்லாண்டுகளின் பின்னரே அவை எழுத்துருப் பெற்றன. இந்த வகையில் மொத்த இராமாயணக்கதைகள் நூற்றுக்கணக்கானவையா அல்லது ஆயிரக்கணக்கானவையா என்பதே ஆய்விற்குரிய பகுதியாகும்.