பாரதி ஆர்வலர் ம.ப.பெரியசாமித் தூரன் அவர்களைத் தமிழ் உலகம் நன்கு அறியும். மகாகவி பாரதியாரின் 42 அரிய கவிதைகள் ம்ற்றும் கட்டுரைகளை அவர் தொகுத்து பாரதியும் உலகமும் என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
பாரதியாரின் அரிய கட்டுரைகளையும் கவிதைகளையும் அவர் சுதேசமித்திரன் இதழ்களிலிருந்து எப்படித் தொகுத்தெடுத்தார் என்பதை நா.மகாலிங்கம் அவர்கள் தன் அணிந்துரையில் எடுத்துக் கூறுகிறார்.
அதையும் பெரியசாமித் தூரன் வழக்கமாக பாரதி பற்றிய நூலில் அழகாக எழுதுகின்ற முன்னுரையையும் சுட்டிக் காட்டுவதே இந்த நூல் பற்றி இங்கு குறிப்பிடுவதன் நோக்கமாகும்.