காவிரி உருவாகும் கர்நாடகத்தின் தலைக்காவிரியிலிருந்து வங்கக்கடலில் சங்கமமாகும் பூம்புகார் வரை, காவிரி உயிர் நீரோட்டக் காப்புப் பயணம் மேற்கொள்ளும் குடகு தேசியக் குழுவினர், மே 29-ம் தேதி மயிலாடுதுறைக்கு வருகை தந்தனர்.
ஏழு பேர் கொண்ட இந்த யாத்திரைக் குழுவினரை டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய குழுவின் தலைவரான நச்சப்ப கொடவா, ‘‘கர்நாடகா, பன்மொழி பேசும் மாநிலம். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கொடவா மொழி பேசும் நாங்களும் வசிக்கிறோம். ஆனால், கன்னட மொழி பேசும் மக்களுக்கு மட்டும்தான், அந்த மாநிலம் சொந்தம் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். காவிரி உருவாகும் எங்கள் குடகுப் பகுதி, 1956-க்கு முன்புவரை தனி மாநில அரசாகத்தான் இருந்தது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது, எங்களைக் கர்நாடக மாநிலத்துடன் சேர்த்துவிட்டார்கள். அதிலிருந்து குடகுவாழ் மக்களைக் கர்நாடக அரசு நசுக்குகிறது.