சூழலை காக்க, காடுகளை காக்க, காட்டுயிர்களை காக்க, நம் தலைமுறைகளை காக்க நாம் சிறிய மாற்றங்களையாவது நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிறிய மாற்றங்கள் தான் நம் தலை மு றை க ளை பக்குவப் படுத்தும். அவர்களுக்கான பூமியை நாம் மீட்டாக வேண்டும். எல்லா உயிர்களுக்குமான அந்த பூமியை நாம் அபகரிக்க நினைத்தால் அது மனித இனத்திற்கே பேராபத்தாக முடியும்,
குழந்தைகளுக்கு புறவுலகின் மீது ஈடுபாட்டை அதிகரிப்பதும், இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுப்பதும் அவசியமானது. இதற்கு முந்தைய எந்த தலை முறை மனிதர்களும் செய்திறாத இந்த பணியை நம் தலைமுறை நம் குழந்தைகளுக்காக செய்தாக வேண்டும். .