திரு. கீழை அ.கதிர்வேலுக்கு நன்கு கதை சொல்ல வருகிறது. ஒவ்வொரு கதையிலும் சமூகத்திற்கு தேவையான ஏதாவது ஒரு செய்திஇருக்கிறது.அவரது எழுத்து நடை தொய்வில்லாமல் சிறப்பாக இருக்கிறது. நா.ஆண்டியப்பன், தலைவர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்.இந்தக் கதைகளைப் படிக்கும்போது சில கதைகள் சிந்திக்க வைக்கின்றன. சில கதைகள் நம்மை அறியாமல் , சிரிக்க வைக்கின்றன. அதுதான் இந்த எழுத்தாளர் கீழை அ.கதிர்வேலின் பலமும் கூட.கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆசிரியர் - 'கலைமகள்'கீழை அ. கதிர்வேல்எல்லாக் கதைகளிலும் பொதுவான நிறைகளாக இருப்பது கதையம்சம், தொய்வில்லாத நடை, சில புதிய கதைக் களங்கள், நகைச்சுவை, சிறுகதை முடிச்சும், கதை முடிவில் அது அவிழ்க்கப்படும் அழகும் என்று கூறலாம்.இராம், வயிரவன், துணைச் செயலாளர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்,
தம்பி கதிர்வேல் அவர்கள் தமிழுலகம் அறிந்த நகைச்சுவை , எழுத்தாளர் என்பதை நாமறிவோம், கதையாக்கும் பாணியை தனதாக்கிக்கொண்டுள்ள தம்பிக்கு எதிர்கால எழுத்துலகத்தில், ஒளிமயமான இடம் இருக்கிறது என்றுமட்டும் நான் உறுதியாகச் சொல்வேன். புதுமைத்தேனீ மா.அன்பழகன், கவிமாலை, சிங்கப்பூர்.இக்கதைத் தொகுப்பை ஒவ்வொரு தங்கமீன் வாசகரும், தம் மனதுக்கு நெருக்கமாக ஒன்றாக உணர்வார்கள் - அவர்களில் ஒருவராக நானும் அவ்வாறே உணர்கிறேன். பாலு மணிமாறன், தங்கமீன் கலை இலக்கிய வட்டம், சிங்கப்பூர்,