அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவுகூட ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சார தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவியிலிருந்து ஆனந்த் அண்ணாமலை எழுதிய கடிதங்களை சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு அதற்கு பதிலும் எழுதினார். அதன் தொகுப்பே இந்த நூல்.