எழுந்து பார்க்கிறாய் சுற்றும் முற்றும் வெளியே ஜன்னல்களில் மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை நீங்காப் புன்னகையுடன் உலகை மீண்டும் ஒருமுறை உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய் கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய என்னைக் கண்டிக்கிறாய் முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய் பின் விழ அரும்பிய கண்ணீரை நிறுத்தி விட்டு சிரிக்கிறாய் இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை ஒருக்காலும் இல்லை