இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கும் கருவியல்ல. மனித குலத்தை வாழ்விக்க உதவும் ஓர் இயக்கம்தான் இலக்கியம்.
கலை என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பாக,விமர்சனமாகத்தான் இருக்கமுடியும் என்பதை இலக்கியம் பற்றி ரகுநாதன் எழுதிய
கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதே போல்மொழிபெயர்ப்புக்கலை பற்றிய அவரது உரை மொழிபெயர்ப்புக் கலை பற்றிய அவரது உரை மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒர் உரை வழிகாட்டியாக அமைந்துள்ளது. மூலத்தின் சிறப்பையும், அழகியலையும் மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வாறு முன் எடுத்துச் செல்லவேண்டுமென்பதை ரகுநாதன் மிகத்தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். எழுத்தாளர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்வதில் விருப்பு வெறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்யவேண்டுமென்பதை தமிழ்சிறுகதைகள்' -ஓர் மதிப்பீடு என்ற உரையில் நாம் காணமுடிகிறது.
- இளசை மணியன்.